ஆரூடச் செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்

குசேலர் வறுமையான கோலத்தில் கண்ணனை சந்தித்தார். தான் வறுமை உலக்கையால் சம்சார உரலில் இடிபடும் அவலத்தை அவல் கொடுத்து நினைவுபடுத்தினார். "அழுத பிள்ளைதான் பால்குடிக்கும்' என்னும் பழமொழியால் நம் பிரார்த்தனைகளை சரியான விண்ணப்பமாகக் கடவுளிடம் தரவேண்டியுள்ளது.

Advertisment

"தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும்தில்லை ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே!' என்று அபிராமி அந்தாதியைப் பட்டர் தொடங்குவதிலிருந்தே மலர்களும் தெய்வங்களுக்குமுள்ள தொடர்பு விளங்குகிறது. ஒவ்வொரு தெய்வத்துக்கும் பிடித்தமான மலர் உண்டு. எப்படி ஒரு மனிதனின் மனம் மலர்களைக்கண்டு மகிழ்ச்சியடைகிறதோ அப்படியே மலர்களால் பூசிப்பதன்மூலம் தெய்வங்களும் மகிழ்ச்சியடைகின்றன. தாமரை, அசோக, மாம்பூ, மல்லிகை, நீலத்தாமரை ஆகிய மலர் அம்புகளைக்கொண்டே அன்னை காமாட்சியும் உயிர்களைக் காக்கிறாள்.

pp

ஆரம்ப நிலையான விதை நிலை, இலை, பூ, காய், கனி என்ற பல நிலைகளில் நம் நிறைவேற வேண்டிய விருப்பங்கள் உள்ளன.

விதை நிலையிலிருந்து முளைத்து வர நவகிரகங்களின் ஆதரவு தேவை.

Advertisment

அதனாலேயே நவகிரகங்களுக்கு நவதானியங்களைப் (விதைகளை) பிரதான பூஜைப் பொருளாக் குகிறோம்.

இலைநிலையிலிருந்து வளர கணபதி, சிவன், விஷ்ணுவின் கருணை வேண்டும் என்பதற்காக அறுகம்புல், வில்வம், துளசியால் அர்ச்சனை செய்கிறோம். பூப்பூத்தல் என்பது பெண்மையின் அடையாளமாகவே கருதப் படுவதால் அம்மனுக்குப் பூச்சூட்டி வழிபடுகிறோம்.

காய்நிலையில் அழுகாமலும், வெம்பாமலும் விக்னமில்லாமல் பழுத்துவர விக்னேஸ்வருக்கு தேங்காய் உடைத்து, நம் உள்ளத் தூய்மையைக் காட்டுகிறோம். நம் விருப்பங்கள் கனிந்தவுடன் நன்றியோடு கனிகளைப் படைக் கிறோம். கலசப் பூஜையில் அரிசி, மாவிலை, பூ, தேங்காய், எலுமிச் சம் பழம் ஒருசேரப் பூர்த்தியா கவைப்பதும் மேற்கூறிய காரணத் திற்காகவேயாகும். கேரளாவில் சிங்க மாதத்தில் கொண்டாடப் படும் ஓணம் பண்டிகையில், ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம்வரை பத்து நாட்களும் பலவித மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு, திருமாலை வழிபடும் வழக்கம் உள்ளது. காலமறிந்து, உரிய மலர் கொண்டுசெய்யும் வழிபாடு கண்டிப்பாகப் பயனளிக்கும்.

பூஜைக்குரிய மலர்களும் பலன்களும்

Advertisment

செந்தாமரை- செல்வம், தொழிலில் மேன்மை, சூரியன் மற்றும் சுக்கிரன் அருள் கிடைக்கும்.

வெண்தாமரை, வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை போன்ற வெள்ளை மலர்களால் செய்யப்படும் பூஜை மனக்குறையைக் போக்கி, தைரியம் சேர்க்கும்.

தங்க அரளி மலர்கள்- கிரகப்பீடை நீங்கி குரு பார்வை மலரும்.

சிவப்பரளி, செம்பருத்தி- மனதை வாட்டும் கவலையகற்றிக் குடும்ப ஒற்றுமை பெருக்கும்.

நீலச்சங்கு புஷ்பம், நிலாம்பரம், நீலோற் பகம் ஆகியவை சனி பகவானின் அருளைத் தந்து, ஆயுளைப் பெருக்கும்.

மனோரஞ்சிதம் குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தி, கணவன்- மனைவிக்குள் அன்பையும் பெருக்கும்.

பாரிஜாதம், அல்லிப்பூ போன்ற சற்று மங்கலான வெள்ளைப் புஷ்பங்கள் சந்திரன் அருளைப் பெற்று புத்தி வலிமையைப் பெருக்கும்.

pp

பாசிப்பச்சை, மரிக் கொழுந்து, மருவு போன்றவற்றால் பூஜைசெய்தால் புதனுடைய நற்பார்வை பெருகி அறிவுண்டாகும்.

அடுக்கு அரளி, செம்பருத்தியால் பூஜைசெய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.

வில்வபுஷ்பம், கருந்துளசி புஷ்பம், மகிழமலர் ஆகியவை ராகு- கேது கிரகங்களின் நற்பலனைத் தரும்.

விநாயகப் பெருமானுக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய மலர்கள் பூஜைக்கு உகந்தவை.

முருகப் பெருமானுக்கு முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தள், செங்காந்தள் கடம்ப மலர், குறிஞ்சிப்பூ, செவ்வலரி உகந்தவை.

திருமாலுக்கு தாமரை, பவளமல்லி, மரிக் கொழுந்து, துளசி, நீலச்சங்கப் புஷ்பம் ஆகியவை உகந்தவை.

வரலட்சுமிக்கு தாழைமடல் மிகவும் சிறந்தது.

சிவபூஜைக்கு மிகவும் ஏற்ற பூக்கள் நாகலிங்கப்பூ, கொன்றை, சண்பகம் ஆகியவையே.

பூஜைக்கு ஆகாத மலர்கள்

வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை. செம்பரத்தை, தாழம்பூ ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை. அறுகு, வெள்ளெருக்கு, மந்தாரம் ஆகியவை அம்மனுக்கு ஆகாதவை.

வில்வம் சூரியனுக்கு ஆகாது.

துளசி விநாயகருக்குக் கூடாது.

பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக்கூடாது.

கேந்தி, வசந்தமல்லி (குருக்கத்தி), வாகை, மாதுளை, தென்னை, பருத்தி, குமிழம், இலவு, பூசணி, விளாப் புளி ஆகியவற்றின் பூக்களைக் கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக்கூடாது.

கடம்பம், ஊமத்தை, ஜாதிப் பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்கவேண்டும். இதுபோலவே, தாழம்பூவை அர்த்தராத் திரிப் பூஜைகளில் மட்டுமே உபயோ கிக்கலாம்.

வசந்த ருதுவாகிய சித்திரை, வைகாசி மாதங்களில் செங்கழுநீர், கடம்ப மலர் ஆகிய பூக்களால் சிவபெருமானைப் பூஜித் தாலும்; ஆவணி, புரட்டாசி மாதங்களில் தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்தாலும் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும்.

சரத் ருதுவாகிய ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் செங்கழுநீர், நீலோற்பலம் புஷ்பங்களினால் சிவபெருமானைப் பூஜித்தால் சந்திர யாகம் செய்த பலன் கிடைக்கும்.

நூறு இதழ்களையுடைய தாமரைப்பூ, மல்லிகைப்பூவால் கிரீஷ்ம ருதுவாகிய ஆனி மற்றும் ஆடி மாதங்களில் சிவபெருமானை அர்ச்சிக்க அக்னிஷ்டோமம் செய்த பலன் ஏற்படும்.

அலரி, நீலோற்பலப் பூக்களினால் ஹேமந்த ருதுவான மார்கழி மற்றும் தை மாதங்களில் பூஜைசெய்தால் நூறு யாகங் கள் செய்த பலன்களை அடையலாம்.

சிசிர ருதுவாகிய மாசி, பங்குனி மாதங்களில் சிவபெருமானைக் கொன்றை மலர்களால் அர்ச்சனை செய்தால் எல்லா யாகங்களையும் செய்த பலன் கிடைக்கும்.

நம் விருப்பத்திற்கேற்ற வாய்ப்பு அரும்பு தலும், மலர்தலுமே முக்கியம் என்பதால், எதிலும் வெற்றிபெறத்தேவையான மலர்களும், தேவியின் அவதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, ஜாதக தோஷப் பரிகாரத்துக் கான பூக்களை ஜாதகருக்கு சாதகமான நேரத்தில் பூஜையில் பயன்படுத்தினால் நல்ல பலன் உண்டு.

செல்: 77080 20714